2020-08-26 05:21:43:
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹🌹💐
இன்றைய சிந்தனை
............................................................
‘’மாறுவோம்...! மாற்றுவோம்...!!
……………………………………………………......
நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்கள் திருந்த வேண்டும் என்றால் அங்கு மோதல்கள் தான் உருவாகும். மாற்றம் வேண்டும், உண்மையில் நாம் விரும்பினால் மாற்றம் நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும்...
நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை, வெளியில் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர வேண்டும், மாற்றம் என்பது உடனே நிகழ்வதில்லை. சிறிது சிறிதாகத் தான் மாற்றம் காணும்.
முதலில் நாம் மாற வேண்டும். நம்மைப் பார்த்து நமது நண்பர் மாறுவார், அவரைப் பார்த்து அவரது நண்பர் என ஒவ்வொருவராக மாறுவர், ஒரு சில அல்லது பல வருடங்களில் எல்லோரும் மாறி இருப்பார்கள். இதற்கான முதல் துவக்கத்தை நாம் தான் தர வேண்டும்...
ஆனால்!, நாம் யாரும் மாற விரும்புவதில்லை, மற்றவரையே மாற்ற விரும்புகிறோம்.
அரசு மதுக்கடை (டாஸ்மார்க்) மூடச் சொல்லி பிரச்சாரம் செய்கிறோம்.நம்மில் எத்தனை பேர் மது அருந்துவதில்லை...?
பொய் வாக்குறுதிகள் தந்து பித்தலாட்டம் ஆடுவதாய் அரசியல்வாதிகளைச் சாடுகிறோம்...? நம்மில் எத்தனை பேர் பொய் பேசுவதில்லை...?
எவரோ சொத்து குவித்து விட்டதாய் புலம்புகிறோம். நம்மில் எத்தனை பேர் வீட்டு மனைகள் ஒன்றுக்கு மேல் வாங்கவில்லை...?
இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தார்கள் என்று குற்றம் சுமத்துகிறோம். நம்மில் எத்தனை பேர் நெகிழிப் (பிளாஸ்டிக்) பைகள் பயன்படுத்துவதில்லை...?
சாதி அரசியல் குறித்து விமர்சிக்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் சாதி மறுத்து வாழ்கிறோம்...?
அரசியல்வாதிகளை நம்பிக்கை துரோகிகள் என்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் நம்மிடம் அன்பு செய்தவர்கள் நம்பிக்கையைக் குலைத்ததில்லை...?
சாக்கடையாய்ப் போனது அரசியல், மதம், சாதி மட்டுமல்ல சமூகமும் தான்.. .!
ஒவ்வொருவரும் மற்றவரை மாற்றியமைக்க முயல்கிறோம். அவர் மாற வேண்டும் இவர் மாற வேண்டும் என்று, இவர்கள் எல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை எந்தவொரு பயனும் எவருக்கும் இல்லை...
மாற்றத்தை விரும்பினால் நாம் மாற வேண்டும். அதனை மற்றவர்கள் பின்பற்றச் செய்வோம். மாற்றம் நம்முள் நிகழாதவரை வெளியில் மாற்றம் இல்லை...
ஆம்.,நண்பர்களே...!
உலகில் உள்ளவர்களை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும்...!
நாம் மாறுவதாய் இருந்தால் தான் உண்மையான மாறுதல் ஏற்படும்...!!
மாற்றம் நம்மில் இருந்து முதலில் தொடங்க வேண்டும்...!!!
-உடுமலை சு. தண்டபாணி✒️
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐
2020-08-26 05:21:53:
2020-08-26 05:22:27:
🔥காலமும் நேரமும் கையில் இருப்பதில்லை...!
எனவே...!
உள்ளத்தை சிதைக்காமல்...!
உணர்வுகளைப் புதைக்காமல்...!
அகத்தில் அழகாய் புன்னகை சேர்த்து...!
புவிமீது ஆனந்தமாய் நடைபோடு...!
எண்ணம் அழகாகும் போது வாழ்க்கை வண்ணமாகும்...!
எண்ணம் போல் வாழ்வு...!🪀
2020-08-26 05:22:32:
2020-08-26 05:23:23:
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
🌐தவறு செய்கிறார்கள் என வெறுக்கத் தொடங்கினால் வாழ்வில் யாரையுமே நேசிக்க முடியாது.
🌐வாழ்க்கைய ஈசியா வாழ முடியாது, பிரச்சனைகள் வரும் போதெல்லாம் போராடித் தான் வாழனும்.
🌐பணம் தகுதி கவுரவம் இதை எல்லாம் சாதாரணமாகப் பார்க்கும், அருமையான உணர்வு தான் நட்பின் சிறப்பு.
🌐உறவும், நட்பும் விட்டுப் போகுமே என நினைத்து, வாதங்களில் நியாயத்தைக் கூட விட்டுக் கொடுத்தால், அதை அவர்களின் வெற்றி என தவறாய் நினைத்து விடுகிறார்கள் சிலர்.
🌐உங்களின் நற்குணங்களை எல்லாம் மற்றவர்களிடம் எதிர் பார்த்தால் மன உளைச்சலை உண்டாக்கும்.
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
2020-08-26 05:23:30:
2020-08-26 10:56:54:
உருகி உருகி எழுதும் வாசகங்களால் எந்தப் பயனும் இல்லை....
உளமாற நேசித்து உடன் இருந்து வளர்க்கும் அன்பிலே அத்துணையும் அடங்கியுள்ளது.
2020-08-26 10:58:10:
அறிந்தும் அறியாமலும்
சில ஓட்டம் புரிந்தும் புரியாமலும்
இந்த வாழ்க்கை தினமும்,
ஒரு பாடத்தைக் கற்பித்துக் கொண்டே
இருக்கின்றது..
2020-08-26 10:58:37:
அது ஒரு வியாதி என நினைத்தேன்.
அதுவே பல நோய்களுக்கு மருந்தானது
மறதி....
2020-08-26 10:59:04:
மனிதன் மிக உயர்வானவன்......
நாய் முதல் பச்சோந்தி வரை பல மிருகங்களின் குணங்கள் அவன் ஒருவனிடமே குடி கொண்டிருப்பதால்..!!
2020-08-26 10:59:43:
2020-08-26 10:59:50:
அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை!
உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு!
பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு!
வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாகக் கடக்கிறார்கள்! மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள்!
கஷ்டத்தில் வரும் துன்பத்தை விட கஷ்டம் வந்து விடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம்!
இதைத் தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்!நம்பிக்கையே வெற்றி தரும்!
2020-08-26 11:00:15:
தட்டிய இடத்தில் தங்கம் கிடைக்கும்…
இடையிடையே முட்களிருக்கும்
தடையெல்லாம் தலை காட்டும்
அது தாண்டி முளைப்பதில்லையா
தோட்ட்த்தில் ரோஜா…
கல் பட்டு கால் தடுக்கும்
சொல்ல வழியின்றி அழக்கூடும்
ஆனாலும் நடை பழகவில்லையா
நம் வீட்டு மழலை…
வீழ்வதற்கு அஞ்சி முகிலின் முக்காடுக்குள் ஒளிந்திருந்தால்
வான் மழையும் மண் சேருமா…
மண் மூடியுள்ளதென்று
கண் மூடியேயிருந்தால்
விதையெல்லாம் செடியாகுமா… ?
கடல் அலைகள் மிரட்டி நிற்கும்
கால் நனைக்காது கரையோடு நின்றிருந்தால் கப்பல்கள் பயன்படுமா ?
முயற்சி தான் திறவுகோல்
அச்சமின்மை தான் ஆதாரம்…
பயிற்சியென்னும் படிநிலை உயர்வு
பாங்கறிந்து நீ நடைபோடு….
நேர்மையென்னும் நெடிய வீதி
நோக்கத்தோடு பயணம் செய்
முகமன் எழுத வெற்றியுந்தன் முகவரி கேட்கும்
தடையில்லா முயற்சி இருந்தால் போதும் தட்டிய இடத்தில்
தங்கம் கிடைக்கும்…
சோம்பலதனை தூக்கியெறி
நாளையுந்தன் வரலாற்றை
காலம் தன் வரவில் வைக்கும் !
2020-08-28 04:06:57:
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
🌺நாம் விரும்பாதது வந்தாலும் துன்பம்..
🌺நாம் விரும்பியது விலகினாலும் துன்பம்..
🌺விரும்பியதை நாம் அடைந்து, அதை இழந்தாலும் துன்பம்..
🌺ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்..
🌺ஒவ்வொன்றாக மறைந்து போகும் இந்த உலக வாழ்வில்..!!
🌺இனிய காலை வணக்கம்
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
2020-08-28 04:08:08:
2020-08-28 04:11:00:
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
💗இன்றைய சிந்தனை...
மூன்று பெரிய பொய்கள்..!!
இன்றைய உலகம் மூன்று பெரிய பொய்களைப் பெரிதும் நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன் இயங்குகிறது.
இக்காலத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் அந்தப் பொய்கள் மீதுள்ள நம்பிக்கை தான் என்று கூட சொல்லலாம்.
அந்த மூன்று பெரிய பொய்கள்..
1) அதிகமாக இருப்பதே நல்லது.
2) பெரியதாக இருப்பதே நல்லது.
3) வேகமாக இருப்பதே நல்லது.
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நம்பிக்கைகளில் தவறென்ன இருக்கிறது என்று தோன்றலாம். இவையெல்லாம் உண்மையல்லவா என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் தெளிவாக சிந்தித்து ஆராய்ந்தால் நமக்கு உண்மை விளங்கும்.
முதல் பொய்யைப் பார்ப்போம். அதிகமாக இருப்பதே நல்லது, அதிகமாகப் பெற்றிருப்பதே வெற்றி என்கிற எண்ணம்.
முக்கியமாக பணமும், சொத்துகளும், அதிகாரமும் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு வெற்றி என்ற கருத்து இன்றைய காலத்தில் வேரூன்றி வருகிறது. இன்னும் சொல்லப் போனால் வெற்றியின் அளவே இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று கூடச் சொல்லலாம்.
தோன்றுகிற அளவுக்கு அது உண்மை தானா என்று பார்க்க அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எந்த அளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என்று தூரத்திலிருந்து பார்க்காமல் அருகே போய்ப் பாருங்கள்.
இல்லா விட்டால் அவர்களுக்கு மிக அருகே இருப்பவர்களைக் கேளுங்கள். பணம், சொத்து, அதிகாரம்... இந்தப் பட்டியல் நீளுமளவு சந்தோஷம், நிறைவு, நிம்மதி பட்டியல் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்களுடைய எல்லா வெற்றியும் வெளித் தோற்றத்துடன் நின்று போகிறது என்பது
உங்களுக்குப் புரியும்.
அதிகமாக இருப்பவர்களுக்கு இழப்பதற்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இழந்து விடுவோமோ என்ற பயம் இருப்பதை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது என்று கூட சொல்லலாம்.
பலர் இருப்பதை அனுபவிக்காமல் ஏதோ ஒரு துஷ்ட சக்தியால் பீடிக்கப் பட்டவர்கள் போல் எந்திரத்தனமாக அதை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு இருக்கிறது என்று அடுத்தவருக்குக் காட்டும் முயற்சியின் அளவுக்கு சேர்த்ததை பயன்படுத்துவதற்கான முயற்சி இருப்பதில்லை.
அதிகமாக சேரச் சேர பொறாமை பிடித்தவர்கள் கூட்டமும், அதை அபகரிக்க நினைக்கிறவர் கூட்டமும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சமயம் பார்த்துக் காத்திருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியும் வர, நிம்மதி காணாமல் போய் விடுகிறது.
இப்போது சொல்லுங்கள்- மிக அதிகம் உண்மையிலேயே சிறப்பானது தானா? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் சொல்வது உண்மையல்லவா?
இரண்டாவதாக, பெரியதாக இருப்பதே நல்லது என்ற பொய். பிரபலமாக இருக்க வேண்டும், எல்லோரும் மிகவும் முக்கியத்துவம் தரும் நிலையில் இருக்க வேண்டும், நாலு பேர் பெருமையாகப் பாராட்டும்படி இருக்க வேண்டும், அதுவே சிறந்த வெற்றி, நல்லது என்கிற இந்த நம்பிக்கையும் மேலோட்டமாகப் பார்த்தால் இதிலென்ன குறை என்று கேட்கத் தோன்றும்.
மிகப் பிரபலமான மனிதர்கள் பெரும்பாலும் சுதந்திரம் என்ற ஒன்றை போகப் போக இழந்து விடுகிறார்கள். மிகப்பிரபலமான நடிகர், நடிகைகளைப் பாருங்கள். எங்கும் அவர்களைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காமிராக்கள் போகிற பக்கமெல்லாம் காத்துக் கொண்டு இருக்கும்.
ஆரம்பத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் போது பெருமைப்படும் அவர்கள் பின்னாளில் மற்றவர்கள் கண்ணில் படாமல் தங்கள் இஷ்டப்படி இருக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கும்.
பெரிய அரசியல்வாதிகளைப் பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளை வாய் விட்டுச் சொல்ல முடியாதவர்களாய் பல நேரங்களில் இருப்பார்கள்.
தெரியாமல் சொல்லி விட்டால் அது பெரும்பான்மை மக்களிடம் எதிர்ப்பைக் கிளப்பினால் நான் அப்படி சொல்லவில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ பிதற்றி அவஸ்தைப் படுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பின் மறந்து கூட நினைத்தபடி பேசவோ, நடந்து கொள்ளவோ முடியாமல் மற்றவர்கள் நினைக்கிறபடி பேசி, நடந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எத்தனை தான் பணமும், சொத்தும் இருந்தாலும் தங்கள் இஷ்டப்படி செயல்படவோ, பேசவோ முடியாத பிரபலங்கள், பிரபலங்களாக இருப்பதற்கு பெரும்பாலும் சுதந்திரத்தையே விலையாகத் தரவேண்டி வருகிறது. சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து மனிதன் பெறத்தக்கது தான் என்ன?
மூன்றாவதாக, வேகமே நல்லது என்கிற பொய். இப்போதைய உலகின் மந்திரச் சொல்லே வேகம் (FAST) தான்.
எதையும் வேகமாகப் பெற வேண்டும், எங்கும் வேகமாகச் செல்ல வேண்டும், எதுவும் வேகமாக மாற வேண்டும்-அதுவே பெருமைக்குரிய விஷயம் என்ற சிந்தனை தான் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆம்புலன்ஸ் போவது போல் மிகவும் அவசரத்தில் வண்டியோட்டி பல பேருக்கு பல இடைஞ்சல்கள் செய்து கடைசியில் ஒரு பெட்டிக் கடையின் முன் வண்டியை நி
2020-08-28 04:11:00:
றுத்தி சாவகாசமாக சிகரெட்டைப் பற்ற வைத்தபடி வேடிக்கை பார்க்கும் சில இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன்.
சிறிது ஏமாந்தால் சிகரெட்டிற்குப் பதிலாக அந்த இளைஞனே சாம்பலாகப் போயிருக்க எத்தனையோ விபத்து வாய்ப்புகள் இருக்கும் வண்ணம் பறந்து வந்து சாதிப்பது சிகரெட் பிடிப்பது தானா?
எதையும் வேகமாகப் பெற வேண்டும் என்ற ஆவல் பலரை எத்தனையோ பேரை நியாயமற்ற குறுக்கு வழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர் அப்படிக் கிடைக்காத போது தவித்துப் போகிறார்கள்.
இதனால் வேகமாகக் கிடைப்பதென்னவோ இரத்த அழுத்தமும், நோய்களும் தான். வண்டிகளில் அதிவேகமாகப் போகிறவர்கள் தாங்கள் நினைத்த இடத்திற்குப் போவதற்குப் பதிலாக ஆஸ்பத்திரியில் சேர்வதும் உண்டு. மற்றவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவதும் உண்டு. வாழ்க்கையில் வேகமாகப் போகிறவர்கள் வாழ்க்கையின் முடிவில் தான் இந்த வேகத் தூண்டுதலில் வாழ மறந்து விட்டோம் என்று உணர்கிறார்கள்.
எதுவும் நம்முடைய உண்மையான இயல்புக்கும், உண்மையான தேவைக்கும் ஏற்ற அளவு இருப்பது தான் நமக்கு நல்லது. பொய்களை அஸ்திவாரமாகக் கொண்ட எந்த வாழ்க்கை முறையும் என்றுமே நிரந்தர நிம்மதியைக் கொடுப்பதில்லை. எனவே இந்தப் பொய்களை உலகம் எவ்வளவு தான் விளம்பரப்படுத்தினாலும் ஏமாந்து போகாதீர்கள்.
💗வாழ்க வளமுடன்💗
பகிர்வு
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
2020-08-28 04:11:14:
2020-08-28 04:13:25:
🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿
💗தெரிந்து கொள்வோம்...
உங்கள் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்கு நேரடித் தகவல் அனுப்பலாம்… எப்படி?
இந்த முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது.
இதன் மூலம் மூளைகளை கனெக்ட் செய்யும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக் கூட உருவாக்கமுடியும்” என்கின்றனர் இந்தக் குழுவினர்.
ஒரு நபரும் இன்னொரு நபரும் தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் எப்படியெல்லாம் பரிமாறிக் கொள்ள முடியும்? பேச்சு வார்த்தையில் அதைச் செய்யலாம்; இல்லை எழுத்துகள் மூலம் பரிமாறலாம். எதுவுமே முடியாதென்றால் சைகைகள் மூலமாவது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆனால் இது எதுவுமின்றி நேரடியாக ஒருவர் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்குத் தகவல்களை எடுத்துச் செல்லும் தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்து வருகின்றனர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இதை `BrainNet’ என்று அழைக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு சிந்தனையின் போது மூளையில் நடக்கும் மாற்றங்களைக் கண்டறிந்து நமக்குக் காட்டும் சாதனங்கள் பலவற்றை வடிவமைத்துள்ளனர் மருத்துவர்களும், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களும். இந்த முன்னேற்றங்களால்தாம் நேரடியாக மூளையிலிருந்து மூளைக்குத் தகவல்கள் அனுப்பும் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமாகியுள்ளது.
இந்தச் சாதனங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று Electro Encephalograms (EEGs) மற்றொன்று Transcranial Magnetic Stimulator(TMS). இதில் EEG மூளையில் நடக்கும் மாற்றங்களைப் பதிவுசெய்யும். TMS அந்தத் தகவல்களை இன்னொரு மூளைக்குக் கொண்டுசெல்லும்.
EEG..
2015-ம் ஆண்டே, ஆண்ட்ரியா ஸ்டாக்கோ மற்றும் அவரது குழுவினர் இந்தச் சாதனங்களை கொண்டு இரண்டு நபர்களின் மூளையை கனெக்ட் செய்தனர். பின்பு இதன்மூலம் இருவரும் 20 கேள்விகள் கொண்ட வினா-விடை விளையாட்டு ஒன்றை ஆடினர். இதன் பின்பு இரண்டு பேர் என்றில்லாமல் பலரையும் இந்த நெட்ஒர்க்கில் இணைத்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்படிப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று உலகின் முதல் நேரடியாக மூளையிலிருந்து மூளைக்குத் தகவல்கள் அனுப்பும் நெட்ஒர்க் ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர் ஆண்ட்ரியா ஸ்டாக்கோ மற்றும் அவரது குழுவினர்.
இந்த BrainNet நெட்ஒர்க் மூலம் கனெக்ட் செய்யப்பட்ட மூவரை டெட்ரிஸ் (tetris) என்ற கேம்மின் சிம்பிளான வெர்ஷன் ஒன்றை ஆட வைத்துள்ளனர். இந்த கேம் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.
மேலே இருந்து பல வடிவங்களில் ப்ளாக்குகள் கீழே வரும். அதைச் சரியாகத் திருப்பி கீழே சேர்த்து அதை நீக்கிக்கொண்டே வரவேண்டும். இதை ஆடும்போது BrainNet-ல் உள்ள ஒருவருக்கு இந்த கேமின் மேற்பகுதி மட்டும் தெரியும், மற்ற இருவருக்கும் முழு கேமும் தெரியும்.
ஆனால், முழுவதும் தெரிபவர்களிடம் கேம் ஆடும் கன்ட்ரோல் இருக்காது. அவர்கள் அனுப்பும் தகவல்களைப் பெற்று மற்றொருவர் தான் வரும் ப்ளாக்கை 180 டிகிரி திருப்பவேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யவேண்டும். BrainNet மூலம் இந்த சிம்பிள் கேம்மை வெற்றிகரமாக இந்த மூவரால் ஆடமுடிகிறது.
“இந்த முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன்மூலம் மூளைகளை கனெக்ட் செய்யும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக் கூட உருவாக்கமுடியும்” என்கின்றனர் இந்தக் குழுவினர்.
இந்தத் தொழில்நுட்பத்தின் பின்னணி மிகவும் சாதாரணமானது தான். ஒவ்வொரு சிந்தனையின் போதும் மூளையில் மின்னணு மாற்றங்கள் ஏற்படும். முன்பு கூறிய EEGs எலெக்ட்ரோடுகள் கொண்டிருக்கும். இதைத் தலையில் மாட்டி விடுவர்.
இது மின்னணு மாற்றங்களைக் கண்காணிக்கும். 15Hz சக்தியுள்ள ஒளியைக் காணும் போது ஓர் அளவிலும், 17Hz சக்தியுள்ள ஒளியைப் பார்க்கையில் ஓர் அளவிலும் மின்னணு மாற்றங்கள் நிகழுமாம். இதை EEG-யால் சரியாக வேறு படுத்திக் காட்டமுடியும்.
மூளை 2 மூளை..
TMS சாதனம் மூளையில் ஏற்படும் சிந்தனைகளை கட்டுப்படுத்த வல்லது.
மின்னணு மாற்றங்களைக் காந்த சக்தியின் உதவியுடன் இது மூளையில் இருக்கும் occipital cortex என்னும் பகுதியில் செலுத்தும். இது மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு ஒளியைப் பார்த்த உணர்வை அவருக்குத் தரும்.
ஏற்கெனவே இதில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஸ்டாக்கோவின் குழுவினர் இப்போது செய்ததைப் போல மூவர் கொண்ட ஒரு நெட்ஒர்க்கை யாரும் உருவாக்கியதில்லை.
இது மூவரைத் தாண்டியும் செயல்படுத்த முடியும் அதற்கான எண்ணிக்கையில் சாதனங்கள் இல்லாததால் தான் அதைச் செய்ய முடியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போதைக்கு ஒளியைப் பார்ப்பதன் மூலம் ஒரே ஒரு தகவல்களைத் தான் இதன் மூலம் அனுப்பமுடிகிறது.
கம்ப்யூட்டர் மொழிகளில் கூறவேண்டும் என்றால் ஒரு bit தான் சென்று சேருகிறது. இதை இன்டர்நெட்க்கு எடுத்துச் செல்வதன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மூளையையும் இன
2020-08-28 04:13:25:
்னொரு மூளையுடன் கனெக்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளது அந்தக் குழு.
ஏற்கெனவே எலான் மஸ்க்கின் மூளையின் மூலம் சாதனங்களை கனெக்ட் செய்யும் `Neurolink’ திட்டம் போன்ற பல ஆராய்ச்சிகள் இதைச்சுற்றி நடந்து வருகின்றது. எல்லாமே தற்போது தொடக்கக் கட்டத்தில் தான் உள்ளது.
இந்த ஆராய்ச்சிகள் இன்னும் பல முன்னேற்றங்களைக் காணும் போது மூளையைப் பற்றி நாம் அறியாத நமக்குப் புதிராக இருக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனால் வரப்போகும் சாதக பாதகங்களும் என்னவென்றும் அப்போது தான் தெரியும். எது எப்படியோ பல சுவாரஸ்மான அறிவியல் கண்டுபிடிப்புகளை வரும் காலங்களிலும் எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி!
பகிர்வு
🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿
2020-08-28 04:13:38:
2020-08-28 04:15:56:
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴
💗படித்ததில் பிடித்தது...
வெற்றியாளர் கணித மேதை "ராமானுஜன்"..!!
அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது.
கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப் படிப்பை முடித்த அவனால் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை.
மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை.
அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம் சுமார் 2000 வெள்ளைத் தாள்கள் வேண்டியிருந்தது).
தெருவில் காணும் காகிதங்களை எல்லாம் பத்திரப்படுத்தி அதில் எழுதிப் பார்ப்பான். சிலேட்டில் எழுதிப் பார்த்து முடிவுகளை மட்டும் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வான்.
காகிதங்களிலேயே பென்சிலில் முதலில் எழுதுவது, பின்பு அதன் மேல் பேனாவில் எழுதுவது என்று இருமுறை ஒரே காகிதத்தை உபயோகப்படுத்தினான்.
வேலை தேடி அலைந்த போது பலரிடமும் தான் நோட்டு புத்தகங்களாக சேர்த்து வைத்திருந்த அந்த கணித உண்மைகளைக் காட்டினான். பலருக்கு அவன் கணிதக் கண்டுபிடிப்புகளும், தேற்றங்களும் என்னவென்றே புரியவில்லை.
முழுவதும் புரியா விட்டாலும் அந்த இளைஞன் ஒரு மேதை என்று புரிந்த சென்னை துறைமுக டிரஸ்ட் டைரக்டர் ஒருவர் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலையை போட்டுக் கொடுத்தார். மாதம் ரூ.25/- சம்பளம். காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம்.
அந்த இளைஞன் ஸ்ரீனிவாச ராமானுஜன். பின் வேறு சில ஆசிரியர்களும், அறிஞர்களும் முயற்சிகள் எடுத்து ராமானுஜனுக்கு சென்னை பல்கலைகழகத்திலிருந்து மாதாந்திர ஆராய்ச்சித் தொகையாக ரூ.75/- வர வழி வகுத்தார்கள்.
ஆனால் ராமானுஜனின் கணிதக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மேதைகள் இந்தியாவில் அச்சமயம் இருக்கவில்லை.
எனவே அவன் தன் தேற்றங்களில் 120ஐ தேர்ந்தெடுத்து கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கணித மேதையான ஜி.எச்.ஹார்டிக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைத்தான்.
உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல கணித ஈடுபாட்டுடையவர்களூடைய கடிதங்களை தினந்தோறும் பெறும் அந்தக் கணித மேதைக்கு அந்தத் தடிமனான தபாலைப் பிரித்து முழுவதும் படித்துப் பார்க்க நேரமில்லை. சில நாட்கள் கழித்தே கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.
தான் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிவதாகவும், தனக்கு பட்டப்படிப்பு இல்லையென்றும், தான் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்துள்ளதாகவும் ஆரம்பத்திலேயே ராமானுஜன் எழுதியிருந்தார். அவருடைய ஆங்கில நடையும் உயர்தரத்தில் இருக்கவில்லை. ஹார்டியைப் போன்ற ஒரு மனிதருக்கு மேற்கொண்டு படிக்காதிருக்க இது போதுமானதாக இருந்திருக்கலாம்.
ஆனாலும் இணைத்திருந்த தேற்றங்களை மேற்போக்காகப் படித்தவருக்கு அவற்றில் இரண்டு பெரிய முரண்பாடுகளைப் பார்க்க முடிந்தது. சிலவற்றில் மிக அபூர்வமான மேதைமை தெரிந்தது. சில இடங்களில் சமகாலத்தைய கணித முன்னேற்றத்தின் அடிப்படை ஞானம் கூட இருக்கவில்லை.
அவர் எழுதிய ஒரு சில தேற்றங்கள் பற்றி முன்பே சிலர் எழுதி வெளியிட்டு விட்டிருந்தனர். அது கூட ராமானுஜனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ராமானுஜனுக்கு கற்றுத் தர ஆரம்பப் பாடங்களே நிறைய இன்னும் இருந்ததை ஹார்டி உணர்ந்தார்.
இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற அந்த மேதைக்கு இந்தியாவில் அடிமட்ட நிலையில் இருந்த ராமானுஜனைப் பொருட்படுத்தாமல் விட எத்தனையோ காரணங்கள் இருந்தன.
ஆனால் அத்தனை
காரணங்களையும், குறைபாடுகளையும் மீறி அந்தத் தேற்றங்களில் ஆங்காங்கே தெரிந்த அந்த அபூர்வமான கணிதப் பேரறிவு ஹார்டியை அசைத்தது. பெரும் முயற்சி எடுத்து ஹார்டி
ராமானுஜனை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வரவழைத்தார்.
ராமானுஜனுக்கு கணிதத்தில் பல அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்து தேற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மீதி சரித்திரமாகியது. ராமானுஜன் என்ற இந்தியக் கணித மேதை உலக அரங்கில் பிரபலமானார்.
தன்னுடைய துறையில் தன்னைக் காட்டிலும் திறமை மிக்கவனாய் ஒருவன் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் முழுத்திறமையும் வெளிப்பட சில அடிப்படைப் பாடங்கள் அவன் கற்பது அவசியம் என்பதை அறிந்து அவனை அழைத்து வந்து அவற்றை கற்றுத் தந்து அவன் பெருமையை உலகறிய வைக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகில் அடுத்தவருக்கு இருக்கின்ற திறமைகளை முடிந்த அளவு அமுக்கப் பார்க்கும் மனம் படைத்த மனிதர்களுக்குக் குறைவில்லாத உலகில் இத்தனை சிரமம் எடுத்து இது போல் செய்ய எந்த அளவு பெருந்தன்மை இருக்க வேண்டும்!
தீட்டாத வைரமாய் சோபையிழந்து பிரகாசிக்காமல் போக இருந்த நம் நாட்டு மேதையை அடையாளம் கண்டு பட்டை தீட்டி கணிதம் உள்ளளவும் பிரகாசிக்க வைத்த அந்த மாமனிதருக்கு
2020-08-28 04:15:56:
கணிதத்துறையும் நாமும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
ராமானுஜன் குறித்த சில சுவாரசிய தகவல்கள்..
* ஹார்டியின் சகாவான லிட்டில்வுட் என்ற கணித அறிஞர் ராமானுஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் எண்கள் தான் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு எண்ணைக் குறித்தும் பார்த்தவுடன் பல சுவையான தகவல்களை கூறும் பழக்கம் ராமானுஜனுக்கு இருந்தது.
* ராமானுஜனும் ஹார்டியும் இங்கிலாந்தில் ஒரு முறை 1729 என்ற எண் உடைய டாக்ஸியில் பயணம் செய்யும் போது அந்த எண்ணைப் பார்த்து ராமானுஜன் கூறினாராம். "இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உண்டு. இருவேறு ஜதை எண்களின் க்யூப்(cube)களின் மிகக்குறைந்த கூட்டுத் தொகை இந்த எண் தான்". பிரமித்துப் போனாராம் ஹார்டி.
கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதன் விவரம்:
1729 = (1x1x1)+(12x12x12) = (9x9x9)+(10x10x10) )
* ராமானுஜனுக்கு கணிதத்தில் எத்தனை கஷ்டமான கேள்விகளுக்கும் எப்படி சுலபமாக பதில் கிடைக்கிறது என்று கேட்ட போது அவர் தன் குல தெய்வமான நாமகிரியம்மன் அவற்றிற்கெல்லாம் பதில் தருவதாக ஒரு முறை குறிப்பிட்டார்.
* காசநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பிய ராமானுஜன் தன் கடைசி காலத்தில் உடல்வலியை மறக்க கடைசி வரை நோட்டுப் புத்தகத்தில் எண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
கணிதத்தில் மூழ்கும் போது எல்லாவற்றையும் மறந்து விடும் அவருக்கு கணிதமே வலி நிவாரணியாக அமைந்தது.
பகிர்வு
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴
2020-08-28 04:16:07:
2020-08-29 03:23:28:
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
🌺சோர்வு அடையும் நேரம் களைத்து விடாதீர்கள்.. அது உங்களுக்கான தேர்வு..!
🌺தீர்வு கிடைக்கும் வரை அயராது உழையுங்கள்..
🌺முடியாது என்பது உங்கள் சிந்தையின் பிழை..!
🌺சிந்தனையை மாற்றுங்கள், அதுவே வெற்றியின் கூற்று..!!
🌺இனிய காலை வணக்கம்
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
2020-08-29 03:24:03:
2020-08-29 03:25:51:
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
💗இன்றைய சிந்தனை...
வைக்கோல்போராய் இருக்காதீர்கள்..!!
வைக்கோல்போர் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறீர்களா? கொழுந்து விட்டு எரியும் அந்தப் பெரும்தீ அந்த நேரத்தில் மிகவும் பிரகாசமாய் தெரியும். தகதவென்று பிரம்மாண்டமாய் எரியும் அந்த செந்தழல் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அணைந்து போயிருக்கும். பின் ஒளியும் இல்லை. வெப்பமும் இல்லை.
பலருடைய ஆர்வமும் அந்த வைக்கோல்போரைப் போல் தான். திடீரென்று தோன்றி ஜொலித்து பிரம்மாண்டமாய் தெரிந்து அவர்களை சாகசம் புரிய வைக்கும். அந்த சமயத்தில் அவர்களைப்
பார்ப்பவர்களுக்கு இவர்கள் இந்தத் துறையில் மிகப் பெரிய ஆளாக, வெற்றியாளராக வருவார் என்று தோன்றுமளவு அவர்களது உற்சாகமும் திறமையும் இருப்பதுண்டு. நானும் அப்படிச் சிலரைப் பார்த்திருக்கிறேன்.
அப்படிப் பெரிதாக அவர்களிடம் எதிர்பார்திருக்கிறேன். ஆனால் சில காலம் கழித்து அவர்களைச் சந்தித்த போது அந்த சுவட்டைக் கூட என்னால் பார்க்க முடிந்ததில்லை.
அவர்களிடம் அதை நினைவுபடுத்திக் கேட்டால் "அதெல்லாம் ஒரு காலம்" என்பது போன்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் வேறொரு துறையில் இதே ஆர்வத்துடன் அவர்கள் எதையோ செய்து கொண்டிருப்பார்கள். இன்னொரு வைக்கோல்போர்.... எல்லாம் சொற்பகாலப் பிரகாசமே.
அது போன்ற நபர்கள் எல்லாம் சராசரிக்கும் மேற்பட்ட அறிவு கூர்மையுடையவர்களே. சில சமயங்களில் அசாதாரண திறமைசாலிகளே. அவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறை திடீரென்று சலித்துப் போவதே.
கைதட்டல்களும், பாராட்டும் குறைய ஆரம்பிக்கும் போது அவர்கள் ஈடுபாடும், முயற்சியும் கூடக் குறைந்து போகிறது. அவர்களுக்கு அதில் சலிப்பேற்பட்டு விடுகிறது. ஒரு த்ரில் இருப்பதில்லை. ஆரம்பித்தில் இருந்த 'inspiration' பிறகு இருப்பதில்லை. மனம் இயல்பாகவே வேறொன்றை நாட ஆரம்பிக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான காரணம் சொல்லத் தெரிவதில்லை.
அவர்களை விடக் குறைந்த திறமை உள்ளவர்கள் சோபிக்கும் போது மட்டும் அவர்களுக்குக் கோபம் வருகிறது. 'இவனெல்லாம் இன்னைக்கு இதில பெரிய ஆள். எல்லாம் நேரம் தான்' என்று
புலம்புவதை நம்மால் கேட்க முடியும். ஆனால் இவர்கள் ஒரு மிகப் பெரிய உண்மையை மறந்து விடுகிறார்கள்.
'ஒரு வேலையைப் பாதியிலேயே விட்டு விட்டுப் போனவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை'. இவர்களை விடத் தகுதி குறைவாக இருந்தாலும் பாதியில் விடைபெற்று விடாமல் தாக்குப் பிடித்திருக்கிறான் என்பதே அந்த சோபித்தவனுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.
கொலம்பஸ் தன்னுடைய உலகப் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தி திரும்பிச் சென்றிருந்தால் அவர் பெயர் சரித்திரத்தில் நின்றிருக்குமா?
இத்தனைக்கும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வழியில் பல பிரச்சினைகள். கப்பலில் அவருடன் வந்த மாலுமிகளும் பாதியில் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஆரம்பித்த பயணத்தை ஒரு உறுதியுடன் அவர் முடித்ததால் தான் அவரை உலகம் நினைவில் வைத்துள்ளது.
Inspiration' தோன்றும் போது மட்டும் ஈடுபடுகிற போது நீங்கள் வைக்கோல்போர் போல் எரிகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். "Inspiration" என்பது ஒரு துவக்கம் மட்டுமே. அது ஒரு ஆரம்ப அக்னியே.
ஆனால் அந்த அக்னியைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிற வேலையை உலகம் செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஒருநாள் உலகம் உங்களைப்
பாராட்டலாம்.
அன்று உண்மையில் உள்ளே உள்ள அக்னி பிரகாசமாய் ஜொலிக்கலாம். ஆனால் மறுநாள் உலகம் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பக் கூடும். இல்லையில் உங்களை அது விமரிசிக்கக் கூடச் செய்யலாம்.
அப்போதும் உள்ளே உள்ள அக்னியை அணையாமல் காத்துக் கொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உள்ள துறையில் தாக்குப் பிடிக்க வேண்டும்.
மற்றவர்களது கருத்துக்களை விடவும் அதிகமாய் உங்கள் நம்பிக்கையும், உறுதியும் இருக்க வேண்டும். அப்படிச் செய்ய முடிகிற போது தான் நீங்கள் ஒரு வெற்றியாளனாக உருவெடுக்க முடியும்.
அதற்கு ஒரே ஒரு ராஜ மார்க்கம் தான் உள்ளது.
உங்களுக்குத் திறமை உள்ளது என்று நம்பும் துறையில் சதா உங்கள் சிந்தனை இருக்கட்டும். அதில் அடுத்தவர்கள் கவனிக்கா விட்டாலும்
ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டே இருங்கள்.
அதில் சாதித்தவர்களைப் பார்த்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மனம், சொல், செயல் என்று தினமும் நம்பிக்கையுடன் ஈடுபடுகிற போது தான் உள்ளே உள்ள அக்னி அணையாமல் காக்கப் படுகிறது. உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
💗வாழ்க வளமுடன்💗
பகிர்வு
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
2020-08-29 03:26:08:
2020-08-29 03:29:11:
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
எங்கு உன் உரிமை
பறிக்கப்படுகிறதோ..
அங்கு நீ அடிமை என்பதை
நினைவுபடுத்திக்கொள்..!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
2020-08-29 03:32:44:
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
உண்மை இல்லாத
உறவுகளுடன்..
ஒட்டி இருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே நல்லது..!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
2020-08-29 03:33:19:
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
கடினமான
பாதைகள் தான்..
அழகான இடங்களுக்கு
அழைத்துச் செல்கின்றது..!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
2020-08-29 03:34:01:
2020-08-29 03:35:04:
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
💗சிந்தனை கதை...
எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது..!!
ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர்.
அவர் சீடர்கள்
அவரைத் தொடர்ந்து சென்றனர்.ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.
குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.
மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள்.
சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.
சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.
செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள்.
அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
“ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.ஒரு பழத்தை எடுத்து
வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.
திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.
சீடர்கள் முகத்தில் மாற்றம்
ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந் தனியாய்த் தானே உண்டது ஏன்?’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.
சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?”
“அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு. “உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு
கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?”
“என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள்.
அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர்.
எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.
பகிர்வு
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
2020-08-29 03:35:23:
2020-08-29 03:36:00:
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
"காலங்களும்"
நிலையானது அல்ல..!
"காயங்களும்"
நிலையானது அல்ல..!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
2020-08-29 03:36:22:
2020-09-04 01:26:18:
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹🌹💐💐💐
இன்றைய சிந்தனை
............................................................
''உங்களை நீங்களே...!''
............................................
மனித வாழ்கையைப் புரட்டிப் போட்ட ஒரு சில மந்திரச் சொற்கள் உண்டு...!
யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ, அவர்கள் தாங்கள் வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்கள்!, பெற்றுக் கொள்வார்கள், நாளை பெறவும் பெறுவார்கள், இது வரலாறு மட்டுமல்ல, நிகழ்கால உண்மையும் கூட...!
மனிதன் தனக்கு முன்வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்தச் சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திரச் சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன...
இவைகளை பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையைப் பொருட்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்...
•உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்...
•உலகை மாற்றி அமைத்த அறிவியல் மேதைகள்...
செல்வத்தை வான் மழையென கொட்டச் செய்த தொழில் மேதைகள்...
உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள்...
எனப் பலரும் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரச் சொற்களை பயன்படுத்தி தாங்கள் வாழ்க்கையில் வெற்றி கண்டார்கள்...
ஆனால்!, நம்முடைய சாமான்ய வாழ்க்கையிலும், நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது, நம்மில் பெரும்பாலோர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இல்லை...
மாறாக, பரிகாரம் தேடி சோதிடர்களையும், கோவில்களையும் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்...
உண்மையில் நாம் கலங்கும் போது இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கின்றோமா...? நாம் தோற்று நிற்கும்போது ஏன் இந்த நிலை எனக் கேட்கிறோமா...?
நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக , நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது ஏன் இந்த நிலை எனக் கேட்பதில்லை...!
நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்கத் தவறுகிறோம்...
பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வதறியாது மலைத்து நிற்கிறோம்...
உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும், நிகழ்கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த மந்திரச் சொற்கள் தான் இவைகள்...
ஆம் நண்பர்களே...!
மீண்டும் உங்கள் முன் எந்தவொரு கேள்விக்கும், சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள், மாறாக!, உரக்க உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்...!
ஏன்...? எப்படி...? எவ்வாறு…? எதனால்..? - என்ற இந்த மந்திரச் சொற்களைப் பயன்படுத்தி உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்...!!
தீராத தேடல் உங்களைத் தொற்றிக் கொள்ளட்டும்...!!!
-உடுமலை சு. தண்டபாணி✒️
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹🌹💐💐💐